உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்றில் இறந்து கிடந்த முதியர்

ஆற்றில் இறந்து கிடந்த முதியர்

அரியாங்குப்பம்: காணாமல் போன முதியவர், ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அரியாங்குப்பம் பி.சி.பி., நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 62; இவருக்கு வலிப்பு நோய் இருந்தது. இவர் கடந்த 5ம் தேதி, வீட்டிலிருந்து காணாமல் போனார். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது மகள் சரஸ்வதி , அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதி ந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் 2:00 மணியளவில், அரியாங்குப்பம் புறவழிச்சாலை ஆற்றுப்பாலம் அருகே தண்ணீரில் மிதந்து நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த, அரியாங்குப்பம் போலீசார், உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு, பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ