கடல் மாதா சிலையை உடைத்தவர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் பெத்தாங் விளையாட்டு மைதானம் அருகே, கடந்த 2015ம் ஆண்டு சுனாமி நினைவாக அப்பகுதி மீனவர்களால் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கடல் மாதா சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலையை தற்போது மீனவர்கள், மீன்பிடிக்க செல்லும் முன்தெய்வமாக கருதி வழிப்பட்டு செல்வது வழக்கம்.இந்நிலையில், கடந்த 21ம் தேதி இரவு11.30 மணியளவில் முத்தியால்பேட்டை,குருசுக்குப்பம் , மரவாடி வீதியை சேர்ந்த ராஜ் (எ) புஷ்பராஜ், 25; என்பவர் குடிபோதையில், கடல் மாதா சிலையை, அங்கிருந்த கருங்கல்லால், துண்டு,துண்டாக உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி வினோத் முத்தியால்பேட்டை போலீசில் மீனவர்களின் மத உணர்வை காயப்படுத்தும் வகையில், கடல் மாதா சிலையை உடைத்து சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்தார்.அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜ் (எ)புஷ்பராஜை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.