மேலும் செய்திகள்
புகார் பெட்டி கடலுார்
01-May-2025
புதுச்சேரி: தினமலர் செய்தி எதிரொலியால் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதான ைஹமாஸ் விளக்குகளுக்கு மின் இணைப்பு கொடுத்து ஒளிரவிடப்பட்டுள்ளது.லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானம் வெளிச்சம் இல்லாமல் இருண்டுபோய் கிடந்தது. இத்தனைக்கும் இரண்டு இடங்களில் பொதுப்பணித் துறை மூலம் ைஹமாஸ் விளக்குகள் புதிதாக அமைத்தும் அவற்றிற்கு மின் இணைப்பு கொடுக்கவில்லை.இதுமட்டுமின்றி ஏர்போர்ட் நுழைவு வாயில் உள்பட 3 இடங்களில் புதிதாக ைஹமாஸ் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த ைஹமாஸ் விளக்குகளுக்கு சேர்த்து மின் இணைப்பு கொடுக்க கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 15ம் தேதி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இது தொடர்பாக கவர்னர், முதல்வர் கவனத்திற்கு சென்றிருந்த சூழ்நிலையில், பொதுப்பணித் துறை லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் போடப்பட்ட 3 ைஹமாஸ் விளக்கிற்கும் மின் இணைப்பு கொடுத்து ஒளிரவிட்டுள்ளது.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'ெஹலிபேடு மைதானத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வாக்கிங், உடற்பயிற்சிகாக வருகின்றனர். அவர்களுக்காக பொதுப்பணித் துறை சார்பில், ஐந்து இடங்களில் ைஹமாஸ் விளக்கு போடப்பட்டுள்ளது.மூன்று ைஹமாஸ் விளக்கிற்கு தற்போது மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்திற்குள் அனைத்து ைஹமாஸ் விளக்குகளும் பயன்பாட்டிற்கு முழுதுமாக அர்ப்பணிக்கப்படும்' என்றனர்.
01-May-2025