உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.ஆர்.டி.சி.,பணிமனைக்கு வழி ஏற்படுத்த வேண்டும்

பி.ஆர்.டி.சி.,பணிமனைக்கு வழி ஏற்படுத்த வேண்டும்

புதுச்சேரி: புதிய பஸ் நிலையத்தில் இருந்து பி.ஆர்.டி.சி.,க்கு ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் வழி ஏற்படுத்த நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.புதுச்சேரி புதிய பஸ் நிலையம் பின்புறம் பி.ஆர்.டி.சி., பணிமனை உள்ளது. பணிமனைக்கு அய்யனார் கோவில் வீதி குறுகிய பாதையில் பி.ஆர்.டி.சி., பஸ்கள் சென்று வருவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.புதிய பஸ் நிலையத்திற்குள் உள்ள கோவில் அருகில் இருந்த பணி மனைக்கு செல்லும் வகையில் சுவர் உடைத்து வழி ஏற்படுத்தி உள்ளனர்.இது தொடர்பாக நேரு எம்.எல்.ஏ., ஸ்மார்ட் சிட்டி இணை தலைமை செயல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பஸ் நிலையம் கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது.பஸ் நிலையத்தின் உள்பகுதியில் பி.ஆர்.டி.சி., பணிமனைக்கு பஸ்கள் செல்ல வழி ஏற்படுத்த இடம் தேர்வு செய்து பாதை அமைக்க வலியுறுத்தினேன். தற்போது அமைக்கப்பட்ட பாதை வழியாக பி.ஆர்.டி.சி., பஸ் வந்தால், மற்ற பஸ்கள் வளையும்போது விபத்து ஏற்படும். எனவே, பி.ஆர்.டி.சி., பஸ்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் பாதை அமைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை