மேலும் செய்திகள்
ஆட்டோ டிரைவர் தற்கொலை
03-Nov-2024
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அருகே கூரை வீடு எரிந்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் தீயில் சாம்பலாயின.தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் ராஜாராம்குமார், விவசாயி. நேற்று மதியம் 1:00 மணியளவில், இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதியில் இருந்தவர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, தீயணைப்பு படையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில், வீட்டில் இருந்த, டி.வி., மின் விசிறி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் சாம்பலாயின. அவற்றின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய் ஆகும். மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதாக, தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
03-Nov-2024