மேலும் செய்திகள்
மகள் மாயம்
18-Oct-2024
புதுச்சேரி : வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் ராமநாதபுரம் வீதியைச் சேர்ந்தவர் ரவி, இவரது மகள் சிந்து 22, இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில், வில்லியனுாரில் உள்ள கடைக்கு உறவினர் கயல்விழி உடன் சென்றார். பின் வில்லியனுாரில் இருந்து வீட்டிற்கு பஸ்சில் செல்லுமாறு சிந்துவிடம் கூறிவிட்டு கயல்விழி அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் இதுவரை அவர் வீட்டிற்கு செல்லவில்லை. உறவினர் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-Oct-2024