மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
08-Nov-2024
புதுச்சேரி : பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தவளக்குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்யா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது தவளக்குப்பம் பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியை வைத்துக் கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். விசாரனையில் அவர் தவளக்குப்பம் சதா நகர் துர்கா வீதியைச் சேர்ந்த சண்முகம் 25, என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
08-Nov-2024