உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண் போலீசின் ஸ்கூட்டி திருட்டு

பெண் போலீசின் ஸ்கூட்டி திருட்டு

புதுச்சேரி: பெண் போலீஸ் ஸ்கூட்டியை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேதாரப்பட்டு மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் மகேஸ்வரி 32, பெண் போலீஸ். இவருக்கு சொந்தமான ஸ்கூட்டியை கடந்த 3ம் தேதி இரவு 8 மணிக்கு வீட்டின் எதிரே நிறுத்திவிட்டு துாங்க சென்றார். பின் மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவரது ஸ்கூட்டி காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் சேதாரப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ