உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிராம மக்கள் ஏமாற்றம்

கிராம மக்கள் ஏமாற்றம்

பாகூர்: சோரியாங்குப்பத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிடாமல் சென்றதால், கிராம மக்கள் ஏமாற்றமடைந்தனர்.தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாகூர், சோரியாங்குப்பம், குருவிநத்தம், இருளஞ்சந்தை, கொம்மந்தான்மேடு, ஆராய்ச்சிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நெல், கரும்பு, மணிலா, மரவள்ளி உள்ளிட்ட அனைத்து பயிர்களும் அழுகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள், முக்கிய ஆவணங்கள் நீரில் அடித்து செல்லபட்டன. மத்திய குழுவினர் பாகூர் பகுதியை நேற்று ஆய்வு செய்தனர். முள்ளோடை துணை மின் நிலையம், கொம்மந்தான்மேடு படுகை அணை, பாகூர் சித்தேரி வாய்க்கால், குருவிநத்தத்தில் விவசாய வயல், இருளஞ்சந்தை இருளர் குடியிருப்பு, சித்தேரி அணைக்கட்டு பகுதிகளை ஆய்வு செய்தனர். கிராம மக்கள், விவசாயிகள் வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினரிடம் விளக்கினர்.இதனிடையே, தென்பெண்ணையாற்றின் படுகையில் அமைந்துள்ள சோரியாங்குப்பம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் வருவர் என காத்திருந்தனர். ஆனால், மத்திய குழுவினர் சோரியாங்குப்பம் செல்லாமல் நெட்டப்பாக்கம் தொகுதிக்கு சென்றனர்.இதனால், தங்கள் கிராமத்திற்கு மத்திய குழுவினர் வருவார்கள் என, காத்திருந்த சோரியாங்குப்பம் கிராம மக்கள் ஏமாற்றமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை