நெஞ்சுவலி ஏற்பட்டு பெண் சாவு
புதுச்சேரி : மூலக்குளம், மேரி உழவர்கரை, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் மாரிரோஸ் தாமஸ் அமல்ராஜ்; வீடு கட்டி தரும் ஒப்பந்ததாரர். இவரது மனைவி என்டா நிர்மலா குமாரி, 57. இவர், நேற்று முன்தினம் வீட்டில், சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலிஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.