உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்

 ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சம் நேற்று நடந்தது. நெட்டப்பாக்கம் பர்வத வர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்து வந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடந்தது. நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !