உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சோரியாங்குப்பத்தில் திருக்குறள் திருவிழா

சோரியாங்குப்பத்தில் திருக்குறள் திருவிழா

பாகூர்: புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில், சோரியங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில், திருக்குறள் திருவிழா நடைபெற்றது.விழாவில், நலப்பணிச் சங்க துணைத் தலைவர் ரமேஷ் வரவேற்றார். தலைவர் நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். பாகூர் ஆசிரியர் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.கலைமாமணி ராஜாராம், சுரங்கத் துறை பொறியாளர் செல்வராஜ் பாராட்டி பேசினர். பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவிகள் திருக்குறள் போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ., தனவேலு பங்கேற்று, மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். ஏற்பாடுகளை தன்னம்பிக்கைக் குழுப் பெண்கள் ஸ்ரீமதி, சிவகங்கை, பிரியதர்ஷினி, பிரவீனா, லாவண்யா, ரோஷினி ஆகியோர் செய்திருந்தனர்.மண்டல அமைப்பாளர் சந்துரு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ