திருக்குறள் திருவிழா
பாகூர் : புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில், சோரியாங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில், திருக்குறள் திருவிழா நடந்தது. சங்க தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். துணைச் செயலர் பவித்ரா வரவேற்றார். அமைப்பாளர் செல்வி, துணைத் தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவி நாகஜோதி, கலாம் சாசன பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சாண்டில்யன், தனியார் நிறுவன மேலாளர் சரவணன் ஆகியோர் பங்கேற்று, விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். துணைச் செயலர் கேசவர்த்தினி நன்றி கூறினார்.