மேலும் செய்திகள்
மணவாள மாமுனிகள் கோவிலில் தேர் திருவிழா
1 hour(s) ago
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகளுக்கு திருமஞ்சனம் நடந்தது. வில்லியனுாரில் அமைந்துள்ள பிரச்சித்திப்பெற்ற பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள மணவாள மாமுனிகளுக்கு அவதார திருவி ழா நடந்து வருகிறது. திருவிழாவின் ஒன்பதாம் நாள் உற்சவத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு மணவாள மாமுனிகளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சுவாமி உள் புறப்பாடு நடந்தது. இதில்திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
1 hour(s) ago