மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்
20-Dec-2025
புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச்சாவடி, சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில், மார்கழி மகோற்சவம் விழாவில் நாளை திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது. இதனையொட்டி, நாளை (25ம் தேதி) காலை 9:00 மணிக்கு திருப்பாவை ஒப்பிவித்தல் போட்டி நடக்கிறது. அதில், நர்சரியில் பயிலும், கேஜி வகுப்பு மாணவர்களுக்கு 3ம் பாசுரமும், 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு 6 பாசுரமும், 4 முதல் 6ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 12 பாசுரம், 7 முதல் 10ம் வகுப்பு மாணவர்களக்கு 20 பாசுரம், 11ம் வகுப்பு முதல் கல்லுாரி வரை உள்ள மாணவர்களுக்கு 30 பாசுரம் மற்றும் கல்லுாரிக்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு 30 பாசுரம் படிக்கும் போட்டி நடக்கிறது. அதில், ஒவ்வொரு பிரிவில், முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசும், போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 26ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, கோவிலில், ஸ்ரீமத் பாகவத புராணத்தை அரவிந்தலோசனன் சுவாமிகள் உபன்யாசம் செய்கிறார். தொடர்ந்து, 2ம் தேதி பக்தி இசை, 3ம் தேதி, ஆருத்ரா தரிசனம், பஜனை நடக்கிறது. 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை, பக்தி இசை நடக்கிறது. 7ம் தேதி இசை குழுவினரின் வீனை நிகழ்ச்சி, 8ம் தேதி, வயலின் இசை, 9ம் தேதி முதல் 10ம் தேதி வரை பக்தி நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 11ம் தேதி, மாலை 5:30 மணியளவில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து 12ம் தேதி முதல் 13ம் தேதி வரை பக்தி இசை நிகழ்ச்சி, 14ம் தேதி நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
20-Dec-2025