உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  திருவள்ளுவர் தினம்; அரசு மரியாதை

 திருவள்ளுவர் தினம்; அரசு மரியாதை

புதுச்சேரி: திருவள்ளுவர் தினத்தையொட்டி, அரசு சார்பில், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருவள்ளுவர் தினத்தையொட்டி, புதுச்சேரி பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், சாய் சரவணன்குமார், பாஸ்கர், ரமேஷ், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சிவா, அவை தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார், சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, நந்தா சரவணன், துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன் உள்ளிட்டோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ஜ., சார்பில் மாநில தலைவர் ராமலிங்கம், உருளையன்பேட்டை தொகுதி தலைவர் சக்திவேல் ஊடகத்துறை தலைவர் நாகேஸ்வரன், இளைஞரணி தலைவர் ஆடலரசன், ஆலய பாதுகாப்பு அமைப்பாளர் சாய்சுதாகர், உருளையன்பேட்டை பொறுப்பாளர் மூர்த்தி, நகர மாவட்ட துணைத் தலைவர் உமாபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல், நமது மக்கள் கழகம் சார்பில் நேரு எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சிவகுமார் மற்றும் தமிழ் அமைப்புகள், பொதுநல அமைப்பினர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை