திருவாசக விண்ணப்பம் நிகழ்ச்சி
புதுச்சேரி: இந்து கலை இலக்கிய முன்னணி சார்பில், குடும்ப நன்மைக்காக திருவாசக விண்ணப்பம் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் குடும்ப நன்மைக்காக திருவாசக விண்ணப்பம் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. தாமோதரன் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக சினிமா நடிகர் ரவிச்சந்திரன் பங்கேற்றார். நிகழ்ச்சியில், சிவனடியார்கள், உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.