எஸ்.ஐ.,யை தாக்க முயன்றவர்கள் கைது
கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். கறிக்கடை சந்தில் தகராறில் ஈடுபட்ட இருவரை பிடிக்க முயன்றபோது, சப் இன்ஸ்பெக்டர் ராஜூவை திட்டி, தாக்க முயன்றனர்.இருவரையும் பிடித்து சோதனை செய்தபோது, கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் சின்ன கோட்டகுப்பம் சமரசம் நகர் ரவுடி ஷாஜகான், 25; ரஹமத் நகர் ஷெரீப், 21; என தெரிந்தது. இருவரையும் கைது செய்து, 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.