உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தம்பதியை தாக்கிய மூவருக்கு வலை

 தம்பதியை தாக்கிய மூவருக்கு வலை

புதுச்சேரி: சேதராப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு, 36. இவரது வீட்டில் பிளம்பர் மற்றும் கொத்தனார் வேலை நடந்து வருகிறது. அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பிளம்பர் வேலை செய்த கிருஷ்ணராஜிடம் தகராறு செய்தார். அதை,ராமு அவரது மனைவி அனிதா தட்டி கேட்டனர். ஆத்திரமடைந்த, அண்ணாதுரையின் மகன்கள் சேரன், கரிகாலன், அகிலன் ஆகியோர் ராமு மற்றும் அவரது மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், சேரன் உட்பட மூவர் மீது சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை