உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குட்கா விற்ற மூவர் கைது

 குட்கா விற்ற மூவர் கைது

புதுச்சேரி: கல்லுாரி, பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி - கடலுார் சாலை, அந்தோணியர் பள்ளி அருகில் கல்லுாரி, பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்கப்படுவதாக நேற்று முன்தினம் உருளையான்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது . போலீசார் விரைந்து சென்றபோது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், வானரப்பேட்டை முருகன், 38; கடலுார், திருப்பாப்புலியூர் ஞானசேகரன், 42; ரோடியார்பேட்டை ராமு, 47, ஆகியோர் என்பதும், கூல் லீப், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்றதும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 71 ஆயிரம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை