மேலும் செய்திகள்
தகராறு செய்தவர்கள் கைது
17-Jan-2025
புதுச்சேரி: குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.உருளையன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட ராஜா நகர், திருவள்ளுவர் சாலையில் 3 நபர்கள் குடிபோதையில், அவ்வழியாக செல்லும் மக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, உதவி சப் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.அதில், பூமியான்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், 24, வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜீவா, 23; திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிரவீன், 25; என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
17-Jan-2025