உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூன்று பைக்குகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

மூன்று பைக்குகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில், 3 பைக்குகளை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன், 45; ரேஷன் கடை ஊழியர். இவரது பி.ஒய்.ஏ.இ. 2381 என்ற பைக்கை, கடந்த 1ம் தேதி பஸ் நிலையம் அருகே நிறுத்தி சென்றார். மாலை வந்து பார்க்கும் போது, பைக் காணாமல் போயிருந்தது.அதே போல, புதுசாரம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த விமல்ராஜ், 39; இவரது பைக்கை, கடலுார் சாலை கோர்ட்டு அருகே நிறுத்தி சென்றார். மேலும், முத்திரையர்பாளையத்தை சேர்ந்த தமிழ்வேந்தன், 28; இவர் தனது பைக்கை, கடந்த 21ம் தேதி, திருவள்ளுவர் சாலையில் நிறுத்தி சென்றார். பின்னர் வந்து பார்க்கும் போது, பைக்குகள் காணாமல் போயிருந்தன. இது குறித்து, 3 பேர் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பைக்குகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை