உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் காலனி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு அடையாள அட்டை, விளையாட்டுச் சீருடை மற்றும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு என, முப்பெரும் விழா நடந்தது. தலைமை ஆசிரியை மணிமேகலை வரவேற்றார். வட்டம் - 4 பள்ளி துணை ஆய்வாளர் திருவரசன் தலைமை தாங்கி, பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை, அடையாள அட்டை, எப்.எல்.என்., போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி, வாழ்த்தினார். பள்ளி முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை