உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

புதுச்சேரி:பிள்ளைச்சாவடி நா. வரதன் அரசு நடுநிலைப்பள்ளியில், சிறந்த ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தில், மரக்கன்று நடும் விழா, மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் விழா என, முப்பெரும் விழா நடந்தது. விழாவில், தலைமையாசிரியர் ராதிகா தலைமை தாங்கி, கல்வி அமைச்சரின் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சுப்ரமணியத்தை பாராட்டினார். உடற்கல்வி ஆசிரியர் சிவமுருகன், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தின் கீழ் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் கழக பொறுப்பாசிரியர் சசிகுமார், மாணவர்களை ஊக்குவித்ததின் பேரில், தங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த மரக்கன்றுகளைக் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நட்டு, அவற்றின் மீது தங்கள் பெயரை எழுதி வைத்தனர். மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் கவிதா, ரேஷ்மி, வாழுமுனி, வரலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை