உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை விபத்தில் மூவர் காயம்

சாலை விபத்தில் மூவர் காயம்

காரைக்கால்: காரைக்காலில் பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் காயமடைந்தனர். நெடுங்காடு மேலகாசாகுடி சாலையில் நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்ட நன்னிலம் வேலங்குடி பகுதியை சேர்ந்த தாவீது குமார்; 19. இவரது நண்பர் ஆகாஷ் என்பவருடன் காரைக்கால் வந்துவிட்டு ,மீண்டும் பைக்கில் ஊர் திரும்பினர். பைக் மேலகாசாகுடி வடபதி சந்திப்பில் வந்த போது எதிர்திசையில் பைக்கில் வந்த பூம்புகார் காவேரிபட்டினம் பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன், 23 ; தாவீதுகுமார் பைக் மீது மோதியது. இதில் காயடைந்த தாவீதுகுமார்,ஆகாஷ்,விபத்தை ஏற்படுத்திய ஜெயகிருஷ்ணன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் அரசு மருந்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் நகர போக்குவரத்து போலீசார் ஜெயகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ