மேலும் செய்திகள்
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
22-Aug-2025
புதுச்சேரி : புதுவை தமிழ் சங்கம் சார்பில், விடுதலை நாள் விழா, தமிழ்ப்பாடத்தில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு, மறுமலர்ச்சி கவிஞர் மன்னர் மன்னன் விழா என, முப்பெரும் விழா நடந்தது. தமிழ்சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் மோகன்தாசு வரவேற்றார். துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள் செல்வம், துணை செயலர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சினிமா இயக்குனர் அழகப்பன் சிறப்பரையாற்றினார்.விழாவில், இங்கிலாந்து பார்லிமெண்டில் புதுச்சேரி பிரதிநிதியாக பேசிய தமிழறிஞர் சுந்தர முருகனுக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து விருது வழங்கி பாராட்டினார். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தமிழ்பாடத்தில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழறிஞர் சிவேந்திரன் நன்றி கூறினார்.
22-Aug-2025