உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆபாசமாக பேசிய மூன்று பேர் கைது

 ஆபாசமாக பேசிய மூன்று பேர் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். காலப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். குயிலாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், 40, என்பவர், மது போதையில், சின்ன காலப்பட்டு, மைதானம் பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக திட்டினார். அவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதேபோல் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் ஆபாசமாக பேசிய கீழ்சாத்தமங்கலம் பாலமுரளி, 33; உருளையான்பேட்டை பகுதியில் ஆபாசமாக பேசிய குருசுக்குப்பம் ஏழுமலை, 49, ஆகியோரை, அந்தந்த போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி