உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வியாபாரியை தாக்கிய சிறுவன் உட்பட மூவர் கைது தப்பியோடியபோது வழுக்கி விழுந்து கை, கால் முறிவு

வியாபாரியை தாக்கிய சிறுவன் உட்பட மூவர் கைது தப்பியோடியபோது வழுக்கி விழுந்து கை, கால் முறிவு

புதுச்சேரி: மாமூல் தர மறுத்த வியாபாரியை தாக்கிய ரவுடி உட்பட மூவரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்ய முயன்றபோது, தப்பி ஓடியபோது வழுக்கி விழுந்ததில் மூவருக்கும் கை மற்றும் கால் எலும்பு முறிந்தது.புதுச்சேரி சின்னையன்பேட்டை சேர்ந்தவர் சந்துரு, 38; இந்திரா சிக்னல் அருகே பங்க் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரிடம் தண்ணீர், கூல்ரிங்க்ஸ், சிகரெட் வாங்கினர். அவர்களிடம் பணம் கேட்ட சந்துருவை மூவரும் சேர்ந்து தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.காயமடைந்த சந்துரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சந்துருவை, ரவுடிகள் மூவர் தாக்கும் சி.சி.டி.வி., காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது. எம்.எல்.ஏ., மற்றும் சமூக அமைப்பினர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர்.அதனைத் தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதனின் அதிரடி உத்தரவை தொடர்ந்து, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா தலைமையில் ரெட்டியார்பாளையம் மற்றும் வடக்கு கிரைம் போலீசார், லாஸ்பேட்டையில் பதுங்கி இருந்த குயவர்பாளையம் விஜய், 20; மற்றும் 17 வயடைய இரு சிறுவர்களை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.திடுக்கிட்ட மூவரும் தப்பியோட முயன்றபோது, வழுக்கி விழுந்ததில், மூவருக்கும் கை உடைந்ததுடன், விஜய் மற்றும் ஒரு சிறுவனுக்கும் கால் எலும்பும் முறிந்தது. அதனையொட்டி, மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யார் இந்த விஜய்

திலாஸ்பேட்டை விஜய் தலைமையில் இயங்கி வந்த 'டியோ கேங்' கோவில் உண்டியல் உடைத்து திருட்டு, 15க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடி சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலில் இருந்து பிரிந்த குயவர்பாளையம் விஜய், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அடிதடி, மாமூல் வசூல் வேட்டை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை