உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கஞ்சா விற்ற வழக்கில் மூவருக்கு 2 ஆண்டு சிறை

 கஞ்சா விற்ற வழக்கில் மூவருக்கு 2 ஆண்டு சிறை

புதுச்சேரி: கஞ்சா வழக்கில் 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. வில்லியனுார் பத்துக்கண்ணு சந்திப்பில் கஞ்சா விற்ற, மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரவிந்த் குமார், 43; உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சாச்சா ராஜி (எ) முகமது, 47; பெங்களூருவை சேர்ந்த சந்தோஷ் ஜெகதீஷ், 45; ஆகியோரை, 19.04.2023 அன்று வில்லியனுார் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 3 வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி கோதண்டராஜ் முன்னிலையில் நடந்து வந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட அரவிந்த்குமார், ராஜி (எ) முகமது, சந்தோஷ் ஜெகதீஷ் , ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விநாயகம் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !