உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி பங்கு சந்தை இணையதளம் மூலம் அரசு அதிகாரியிடம் ரூ.75 லட்சம் மோசடி

போலி பங்கு சந்தை இணையதளம் மூலம் அரசு அதிகாரியிடம் ரூ.75 லட்சம் மோசடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: போலியான பங்கு சந்தை இணையதளம் மூலம் அரசு அதிகாரியிடம் ரூ. 75 லட்சம் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையராக இருந்து, தற்போது அதிகாரியாக பதவி வகிப்பவரை, கடந்த 3 மாதத்திற்கு முன்பு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பார்க்கலாம் என ஆசை வார்த்தை கூறினர்.இதனை நம்பிய அதிகாரி, மர்ம நபர்கள் உருவாக்கி கொடுத்த ஆன்லைன் பக்கத்தில், பல தவணைகளில் ரூ. 75 லட்சம் முதலீடு செய்தார். அதன் மூலம் அவர் ரூ. 8 கோடி லாபம் ஈட்டியது போல, ஆன்லைன் பக்கத்தில் காண்பித்தது.இந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சித்தார். பணத்தை எடுக்க வேண்டும் என்றால், அதற்கான வரி ரூ. 45 லட்சம் தங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என மர்ம நபர்கள் கூறினர்.இதனை நம்பிய அதிகாரி, ரூ. 45 லட்சம் பணத்தை மர்ம நபரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய சென்றார். இதை அறிந்த வங்கி மேலாளர், சைபர் கிரைம் மோசடி கும்பல் உங்களை ஏமாற்றி உள்ளது என விளக்கினர். அதன்பின்னரே, தான் ஏமாந்ததை உணர்ந்த அதிகாரி, இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Columbus
செப் 26, 2024 12:37

Rs 75 lakhs with a retd govt officer is fairly reasonable. Only he was greedy.


theruvasagan
செப் 26, 2024 10:15

ஒரு ஓய்வு பெற்ற அரசு ரொக்கமாக அதிகாரியிடம் 75 லட்சம். குறுகிய காலத்தில் அதை 8 கோடியாக ஆக்கும் பேராசை. பேராசை. பெருநஷ்டம். பணம் எந்த வழியில் வந்ததோ அதே வழியிலே போயும் விட்டது. ஆறிடும் மேடும் மடுவும் போல மாறிடும் செல்வம் என்கிற அவ்வைப் பிராட்டியின் நீதிபோதனையை இக்காலத்தல் சொல்லுபவர்கள் உண்டா. கேட்பவர்கள்தான் உண்டா.


karunamoorthi Karuna
செப் 26, 2024 09:14

உழைத்து சம்பாதித்த பணமாக இருக்குமா இல்லை இலஞ்சம் வாங்கிய பணமா


VENKATASUBRAMANIAN
செப் 26, 2024 07:57

இவன் படித்தவன் தானே அறிவு வேண்டாம்.எப்படி ஒரே நாளில் அவ்வளவு லாபம் வரும். அப்படியே இருந்தாலும நிஃப்டி வெப்சைட்டில் சரி பார்க வேண்டாமா. ஒன்றுமே தெரியாது ஆனால் பணத்தாசை மட்டுமே உண்டு


RAMAKRISHNAN NATESAN
செப் 26, 2024 07:51

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை என்பது குறள் ......


அப்புசாமி
செப் 26, 2024 05:20

அரசு அதிகாரிக்கு எப்புடி 75 லட்சம் வந்திச்சுன்னு கண்டுபிடிங்க


சமீபத்திய செய்தி