தினமலர் கண்காட்சிக்கு
குறைந்த விலையில் தரமான பொருட்கள் 'தினமலர' எக்ஸ்போ ஆண்டுதோறும் புதுச்சேரியில் நடத்தப்படுகிறது. இந்த எக்ஸ்போவினால், புதுச்சேரி மட்டுமின்றி, தமிழக மக்களும் பயன்பெறுகின்றனர். தரமான பொருட்கள் குறைந்த விலையில் ஒரே இடத்தில் கிடைக்கிறது. பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் பயன் பெறுகின்றனர். உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கிறது. மேலும், இங்கு அமைந்துள்ள 'கிட்ஸ் ஜோனில்' மழலைகள் மற்றும் சிறுவர்கள் விளையாடி மகிழ்வதை பார்க்கும் போது, மனதிற்கே இதமாக உள்ளது. மக்களை மகிழ்விப்பதற்காக பிரம்மாண்டமான இடத்தில் எக்ஸ்போ நடத்தும் 'தினமலர்' நிர்வாகத்திற்கு நன்றி என்றார். கந்தசாமி, முன்னாள் அமைச்சர், புதுச்சேரி