புகையிலை விழிப்புணர்வு முகாம்
புதுச்சேரி: புதுச்சேரி நலவழித் துறை, தேசிய சுகாதார திட்டம் சார்பில், வாய் சுகாதாரம் மற்றும் புகையிலை விழிப்புணர்வு முகாம், லாஸ்பேட்டை விவேகானந்தா ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் வரவேற்றார். மாநிலத் திட்ட அதிகாரி கவிப்பிரியா தலைமையிலான நடமாடும் பல் மருத்துவ குழுவினர் வாய் சுகாதாரம் பேணுவதற்கான வழிமுறைகள் குறித்தும், புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள், வாய் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள், அவற்றை கண்டறியும் முறைகள், புகையிலை பாதிப்பிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அனைவருக்கும் பல் பரிசோதனை செய்யப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி மாணவர்கள், ஆசிரியர்கள் பயன் பெற்றனர்.