உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அஞ்சலகத்தில் நாளை குறைகேட்புக் கூட்டம்

அஞ்சலகத்தில் நாளை குறைகேட்புக் கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நாளை 7ம் தேதி நடக்கிறது. முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பு: அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் நாளை 7ம் தேதி காலை 11:30 மணியளவில் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில், வாடிக்கையாளர்கள் அஞ்சல் துறை சேவையில் ஏற்பட்டுள்ள தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். மேலும், www.indiapost.gov.inஅல்லது dopondicherry.indiapost.gov.inமூலமாக அஞ்சல் குறைகேட்பு புகார் என குறிப்பிட்டு அனுப்பலாம். 0413–2334837, 2337017, 2225373 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை