உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 15 பேர் லேசான காயத்துடன் தப்பினர்

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 15 பேர் லேசான காயத்துடன் தப்பினர்

வில்லியனுார்: வில்லியனுார் அருகே சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் பாலமுருகன்,28; இவர் வார விடுமுறை கொண்டாடமாக நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர்களுடன் வில்லியனுார் போகோ லேண்ட் சுற்றுலா தளத்திற்கு சென்றுகொண்டிருந்தார்.வில்லியனூர்-பத்துக்கண்ணு சாலையில் பகல் 12 :00 மணியளவில் சென்றபோது, முன்னாள் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் திடீரென வலது பக்கம் திரும்பியதால், வேன் டிரைவர் விபத்தை தவிர்க்க வலது பாக்கம் திருப்பினார். அப்போது எதிர்த்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்த திருமுருகன்,46;, மீது வேன் மோதி, நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது.இந்த விபத்தில் பைக்கிள் வந்த திருமுருகன் படுகாயமடைந்தார். வேனில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். அனைவரையும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பலத்த காயமடைந்த திருமுருகன் ஜிப்மர் மருத்துவனையில் திவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து நடந்த இடத்துக்கு சீனியர் எஸ்.பி பிரவீன் குமார் திரிபாதி, போக்குவரத்து எஸ்.பி (பொறுப்பு) செல்வம், இன்ஸ்பெக்டர் செந்தில்கணேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை