நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்
அரியாங்குப்பம்,: நோணாங்குப்பம் படகு குழாமில், விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகாக இருந்தது.வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு நாளுக்கு நாள், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள், நோணாங்குப்பம் படகு குழாமில், படகு சவாரி செய்து, பாரடைஸ் பீச்சிற்கு சென்று கடலில் குளிக்க விரும்புகின்றனர்.வார விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் படகு குழாமில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக வெயில் அதிகமாக இருந்ததால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.நேற்று விடுமுறை தினமாகவும், வெயில் சற்று குறைவாகவும் இருந்ததால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.