தொடர் மழையால் விடுதியில் முடங்கிய சுற்றுலா பயணிகள்
புதுச்சேரி : புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் இருந்து, சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.இவர்கள், புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பே, ஆன்லைன் மூலம், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். சில நேரங்களில், புக்கிங் முடிந்து விடுவதால், நகருக்கு வெளிப்பகுதிகளில் தங்கி கொள்கின்றனர். அவ்வாறு இந்த வார விடுமுறைக்கு புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் புயல் மற்றும் தொடர் மழை காரணமாக வெளியில் செல்ல முடியாமல் விடுதி அறைகளில் முடங்கியுள்ளனர்.