உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பொம்மை வியாபாரி தற்கொலை

 பொம்மை வியாபாரி தற்கொலை

புதுச்சேரி: அய்யங்குட்டிபாளையம், நாவலர் வீதியை சேர்ந்தவர் பாவாடை சாமி, 53; மாற்றுத் திறனாளியான இவர் கோவில் விழாக்களில் பொம்மை வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு, ஜோதி என்ற மனைவியும், ஒரு மகன் உள்ளனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக பாவாடைசாமி, பலரிடம் கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த ஒரு வாரமாக போதிய வேலை இல்லாததால், கடனை நினைத்து துாக்கம் வரவில்லை என பாவாடைசாமி மனைவியிடம் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை பாவாடைசாமிக்கு டீ கொடுக்க அவரது மனைவி அறைக்கு சென்றபோது, ஜன்னல் கம்பியில் நைலான் கயிறால் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை