உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டிராக்டர், இரு சக்கர வாகன ஊர்வலம்

டிராக்டர், இரு சக்கர வாகன ஊர்வலம்

புதுச்சேரி: புதுச்சேரியில் வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'இண்டியா' கூட்டணி மற்றும் ஐக்கிய முன்னணி விவசாயிகள் சார்பில், டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகன ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை புதுச்சேரி - கடலுார் சாலையில் உள்ள தியாகிகள் சிலை அருகில் வைத்திலிங்கம் எம்.பி., துவக்கி வைத்தார். ஏராளமான டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகனங்களில் விவசாயிகள் பங்கேற்றனர்.ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, ராஜிவ், இந்திரா, பெரியார் மற்றும் நெல்லித்தோப்பு சுப்பையா சிலை வழியாக சென்று சுதேசி மில் அருகில் நிறைவு பெற்றது. இதில் ஏ.ஐ.டி.யு.சி பொதுச்செயலாளர் சேது செல்வம், விவசாயிகள் சங்கம் கீதநாதன் மற்றும் இண்டியா கூட்டணி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !