மாட்டை கத்தியால் வெட்டிய வியாபாரி: வீடியோ வைரல்
காரைக்கால்: காரைக்காலில் சாலையோர பழ வியாபாரி கடையை சேதப்படுத்திய மாட்டை கத்தியால் வெட்டிய சம்பவ வீடியோ வைரலாகி, பல்வேறு தரப்பினர் வியாபாரியை கண்டித்து வருகின்றனர்.காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கால்நடைகள் சாலைகளில் திரிவாதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது.மேலும் கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை சாலையோரத்தில் திரிய விடுவதால் அது உணவுக்காக சாலையோர வியாபாரிகளின் பழக்கடை மற்றும் காய்கறிகள், கீரை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேதப்படுத்தி வருகிறது.இதில் ஒரு சில வியாபாரிகள் கால்நடை என்று துரத்தி விடுவது வழக்கம் சில வியாபாரிகள் அதை தாக்குவதும் வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் பாரதியார் சாலையில் , சாலையோர வியாபாரி ஒருவரின் கடையில் பழங்களை சேதப்படுத்தும் போது ஆத்திரமடைந்த வியாபாரி கையில் வைத்திருந்த கத்தியால் மாட்டின் வாலில் வெட்டியதில் சாலை முழுவதும் ரத்தம் கொண்டியது. இதைக் கண்ட பொதுமக்கள் சிலர் கண்டனத்தை தெரிவித்து , வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.