மேலும் செய்திகள்
எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடியால் பெரும் பரபரப்பு
11-Nov-2024
சோஷியல் மீடியாவில் கட்டுப்பாடுகள் தேவை!
08-Nov-2024
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஜிப்மர் எதிரில் உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் தரை தளத்தில் 25 கடைகள், முதல் தளத்தில் 4 கடைகள் உள்ளன. இக்கடைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக சிவசங்கரன் எம்.எல்.ஏ.,க்கு ரவுடி ராமு மிரட்டல் விடுத்தார். போலீசார் ரவுடி ராமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜிப்மர் வணிக வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உழவர்கரை நகராட்சி கடந்த 16ம் தேதி அகற்றினர். அப்போது 4 கடைகளின் சுவர்களை உடைத்து ஒரே கடையாக நடத்தி வருவதும், சிலர் கடைகளின் சுவர்களை இடித்து மாற்றம் செய்திருப்பது தெரியவந்தது.இதனால் விதிமுறைகளை மீறி சுவர்களை உடைத்த 10 கடைகளுக்கு, கடையின் லைசன்சை ஏன் ரத்து செய்ய கூடாது என, உழவர்கரை நகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. உழவர்கரை நகராட்சியில் நேற்று மாலை ஆஜரான வியாபாரிகள் நோட்டீசுக்கு விளக்கம் அளித்தனர்.பின்பு, மாலை 6:00 மணிக்கு உழவர்கரை நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். இடிக்கப்பட்ட சுவர்கள் மீண்டும் கட்டப்பட்ட பின்பும் லைசன்ஸ் ரத்து செய்வோம் என, நகராட்சி மிரட்டுவதாக புகார் தெரிவித்தனர். பின், அனைவரும் கலைந்து சென்றனர்.
11-Nov-2024
08-Nov-2024