உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரியாங்குப்பத்தில் போக்குவரத்து மாற்றம் 

அரியாங்குப்பத்தில் போக்குவரத்து மாற்றம் 

பாகூர்: அரியாங்குப்பத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி விடுத்துள்ள செய்தி குறிப்பு;அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் சாலையில் உள்ள ஆர்ச் அருகே பாதாள சாக்கடை சீரமைக்கும் பணி நடக்க உள்ளது. இதனால் இன்று 17ம் தேதி முதல் பணி நிறைவடையும் வரை புதுச்சேரியில் இருந்து வீராம்பட்டினம் செல்லும் கனரக வாகனங்கள் மாற்று பாதையாக அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள மணவெளி - சின்ன வீராம்பட்டினம் வழியாக சென்று வர வேண்டும்.கார் மற்றும் பைக்குகள் மட்டுமே மாதா கோவில் வழி மற்றும் மார்க்கெட் வீதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி