மேலும் செய்திகள்
சிக்னல்களை இயக்காததற்கு போலீசார் 'நொண்டி' காரணம்
17-Dec-2024
உட்புற சாலையில் புகுந்து சென்ற ஆம்புலன்ஸ்புதுச்சேரி என்றால் அழகிய சுற்றுலா தளம் என்ற பெயர் மாறி போக்குவரத்து ஒழுங்கு அற்ற மாநிலம், எப்பொழுதும் கடும் டிராபிக் ஜாம் ஏற்பட கூடிய இடம் என சுற்றுலா பயணிகள் மத்தியில் எண்ணம் உருவாகி வருகிறது.இதற்கு காரணம் நகரின் முக்கிய சந்திப்புகள், இந்திரா, ராஜிவ் சிக்னல்களில் தினசரி ஏற்படும் டிராபிக் ஜாம். இரு சிக்னல்களிலும் ஏற்படும் டிராபிக் ஜாமை சரிசெய்ய முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறுகின்றனர். சனிக்கிழமை அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்ததால் டிராபிக் ஜாம் என வழக்கமான கதையை கூறினர்.உண்மையில் டிராபிக் ஜாம் ஏற்பட போலீசாரே முதல் காரணம். சிக்னல்களை உடனுக்குடன் திறந்து வாகனங்களை அனுப்புவதற்கு பதில், ஒரு பாதையில் உள்ள ஒட்டுமொத்த வாகனங்கள் செல்லும் வரை வெகு நேரம் திறந்து வைத்திருப்பதால், மற்ற 3 சாலைகளில் 2 கி.மீ., வரை வாகனங்கள் நிற்பதால், செயற்கையாக டிராபிக் ஜாம் உருவாகி விடுகிறது.இதுதவிர, ராஜிவ் சிக்னல் முதல் ரயில்வே மேம்பாலம் வரை சாலையின் வரிசையாக பஸ், லாரி, கிரேன், வேன், தள்ளுவண்டிகள் என, 100 வாகனங்கள் நிற்கிறது. இதனால் நேற்று மதியம் 12:00 மணிக்கு, நுாறடிச்சாலையில் துவங்கிய டிராபிக் ஜாம் மாலை 5:00 மணி வரை உச்சகட்ட டிராபிக் ஜாம் ஏற்பட்டது.ராஜிவ் சிக்னலில் 5 சாலைகளிலும், இந்திரா சிக்னலில் 4 சிக்னல்களில் 2 கி.மீ., துாரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. கடலுாரில் இருந்து ஜிப்மர் நோக்கி வந்த ஆம்புலன்ஸ் மதியம் 3:15 மணிக்கு ராஜிவ் சிக்னல் டிராபிக்கில் சிக்கி கொண்டது.தந்தை பெரியார் நகர் வழியாக உள்ளே புகுந்த ஆம்புலன்ஸ், பேட்ரிக் பள்ளி வழியாக கவுண்டன்பாளையம் வழியாக வழுதாவூர் சாலையை அடைந்து அங்கிருந்து, ஜிப்மர் சென்றது. இதுபோல் டிராபிக்கில் சிக்கி கொண்ட ஏராளமான வாகனங்கள், நகர் சாலைகளில் புகுந்து தப்பித்து சென்றனர்.இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னலில் ஏற்படும் டிராபிக் பிரச்னைக்கு நிரந்தர தீர்வே கிடையாதா என பொதுமக்கள் புலம்பியபடி சென்றனர்.
17-Dec-2024