போக்குவரத்து போலீசார் கையெழுத்து இயக்கம்
புதுச்சேரி: போக்குவரத்து கிழக்கு போலீஸ் நிலையம் சார்பில், வந்தே மாதரம் முழக்கத்தின் 150 வது ஆண்டு நிறைவையொட்டி, கையெழுத்து இயக்கம் நடந்தது. வங்க மொழி கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைந்தைதயொட்டி, நாடு முழுதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து பிரிவு சார்பில், வந்தே மாதரம் பாடல் குறித்த கையெழுத்து இயக்கம் நடந்தது. இன்ஸ்பெக்டர் நாகராஜ் வரவேற்றார். எஸ்.பி., ரட்சனாசிங் தலைமை தாங்கி, வந்தே மாதரம் பாடல் சுதந்திர போராட்டத்தில் வகித்த முக்கிய பங்கு குறித்து விளக்கி கூறினார். போலீசார் மற்றும் மாணவர்கள் இணைந்து வந்தே மாதரம் பாடல் பாடினர். இதைத் தொடர்ந்து, கல்வே கல்லுாரி மாணவர்கள் கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், சப் இன்ஸ்பெக்டர்கள் வேணுகோபால், அன்சர்பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.