உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தடையை மீறி நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் போக்குவரத்து போலீசார் அதிரடி

தடையை மீறி நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் போக்குவரத்து போலீசார் அதிரடி

பாகூர் : பிள்ளையார்குப்பம் - சார்காசிமேடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு, கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். புதுச்சேரி - கடலுார் சாலை பிள்ளையார்குப்பத்தில் தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, செவிலியர், துணை மருத்துவம் உள்ளிட்ட கல்லுாரிகள் உள்ளது. இங்கு, புதுச்சேரி, தமிழக பகுதியை சேர்ந்த பலர் பயின்று வருகின்றனர். அது மட்டுமின்றி ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காகவும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனையையொட்டி உள்ள சார்காசிமேடு சாலையின் இருபுறமும், மாணவர்கள், டாக்டர்கள், ஊழியர்கள் என தங்களது கார், பைக் போன்ற வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், அந்த சாலையில், வாகனங்களை நிறுத்தி வைக்க தடை விதித்து, எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், நேற்று காலை மீண்டும் அந்த சாலையில் கார், பைக் போன்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இன்ஸ்பெக்டர் தன்வந்திரி உத்தரவின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து போலீசார், போக்குவரத்திற்கு இடையூராக விதியை மீறி நிறுத்தப்பட்டிருந்த கார்களின் டயர்களுக்கு பூட்டு போட்டு, அபராதம் விதித்து, அதற்கான நோட்டீஸ்களை காரில் ஒட்டி விட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ