மேலும் செய்திகள்
பொறுப்பேற்பு
05-Mar-2025
புதுச்சேரி: அதிவேகமாக கார் ஓட்டி வந்ததை தட்டி கேட்ட டிராபிக் சப் இன்ஸ்பெக்டரை தக்கிய இரு வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து சப்இன்ஸ்பெக்டர் குமார்.நேற்று முன்தினம் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் மானிய கோரிக்கை விவாதம் இரவு வரை நடந்தது. அப்போது, போக்குவரத்து பணியில் இருந்த சப்இன்ஸ்பெக்டர் குமார், தனது நண்பரான பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர் குமரவேல் என்பவருடன் இரவு 9:20 மணிக்கு, பைக்கில் சாப்பிட ஒட்டலுக்கு சென்றனர்.இருவரும் ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக பைக்கில் சென்றபோது, அண்ணா சாலையில் இருந்து கிழக்கு நோக்கி அதிவேகமாக வந்த கார், சப்இன்ஸ்பெக்டர் குமார் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதுவது போல் வந்து நின்றது. சப்இன்ஸ்பெக்டர் குமார், ஏன் இவ்வளவு வேகமாக வருகிறீர்கள் என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த தீபன், 25; முதலியார்பேட்டையைச் சேர்ந்த சம்ரூதன், 24; இருவரும் சப்இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் அவரது நண்பர் குமாரவேல் இருவரையும் சராமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர்.இது குறித்து சப்இன்ஸ்பெக்டர் குமார் பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், தீபன், சம்ரூதன் ஆகியோர் மீது அரசு ஊழியரை தாக்குதல், அடிதடி என 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
05-Mar-2025