மேலும் செய்திகள்
தோலம்பாளையம் ரயில்வே கேட் நிரந்தரமாக அடைப்பு
06-May-2026
புதுச்சேரி: புதுச்சேரியில் மும்மொழி பாடத்திட்டத்தை அமுல் படுத்துவதை கண்டித்து தமிழ் உரிமை இயக்கம் சார்பில் நேற்று மதியம் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள், மதியம் 12 மணியவில், புவன்கரே வீதி, காராமணிக்குப்பம் எல்.சி. 14 ரயில்வே கேட்டிற்கு சென்று ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து புறப்பட்ட ரயில் புதுச்சேரி நோக்கி வந்தது. இதையடுத்து, கேட் கீப்பர் மாவேந்திரன் ரயில் நிறுத்த சமிக்கைகள காண்பித்தார். இதனால் ரயில் 100 அடி சாலை மேம்பாலம் அருகே வந்தபோது வேகம் குறைந்தது. தொடர்ந்து, புவன்கரே வீதி ரயில்வே கேட் அருகே 12:40 மணிக்கு வந்து நின்றது. போராட்டக்காரர்கள் ரயில்முன் நின்று கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து எஸ்.பி., சுருதி தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். பின் ரயில் 15 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் புவன்கரே சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.
06-May-2026