வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மிகவும் சிறப்பு
புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் முதுநிலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சட்ட சேவை மையம் சார்பில்'சட்ட சேவை ஆணையம் மூலம் செயல்படும் சட்டம்' என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சிப் பட்டறை நிறுவன வளாகத்தில் நடந்தது. சட்ட சேவை மையத்தின் தலைவர் மாரி ஜோசபின் அருணா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார். தேர்வு கட்டுப்பாளர் அர்ஜூன் தலைமை உரையாற்றினார். சிறப்பு அழைப்பளராக மாவட்ட நீதிபதி அம்பிகா கலந்து கொண்டு, சட்ட சேவை ஆணையத்தின் செயல்பாடுகள், அனைத்து சமூகத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டியதன் முக்கியம் குறித்து பேசினார். வழக்கறிஞர் ரீனா ஈஸ்வரியா, குடும்ப வன்முறை என்ற தலைப்பில் பேசினார். சைபர் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் சைபர் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் பேசினார். பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்பு என்ற தலைப்பில் வழக்கறிஞர் மாரி அன்னா நயாவதி பேசினார். புதுச்சேரி சட்ட துறை துணை செயலாளர் ஜான்சி, சட்ட உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து பேசினார். பயிற்சி பட்டறையில் மாணவர்களுக்கு சட்டம் மற்றும் சமூக பிரச்னைகள் குறித்தும், சட்ட சேவைகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை மையக் குழு உறுப்பினர்கள் ரஜினி சணோலியன், அலமேலு மங்கை ஆகியோர் செய்திருந்தனர்.
மிகவும் சிறப்பு