உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை நிறைவு

தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை நிறைவு

புதுச்சேரி: புதுச்சேரி, பள்ளிக்கல்வி இயக்ககம், மாநில பயிற்சி மையம் சார்பில் மாணவர்களின் 'முழுமையான முன்னேற்ற அட்டை' தொடர்பான பயிற்சிப் பட்டறை நடந்தது.மாணவர்களின் பாடம் சார்ந்த மற்றும் இணைப் பாடத்திட்ட செயல்பாடுகளை முழுமையான முறையில் மதிப்பீடு செய்யும் பொருட்டு புதிய கல்விக் கொள்கையின் கீழ் 'முழுமையான முன்னேற்ற அட்டை' முறை உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் முழுமையான முன்னேற்ற அட்டை முறையை பள்ளி தலைமையாசிரியர்களிடம் கொண்டு செல்லும் வகையில், மாநில பயிற்சி மையம் சார்பில் இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை லாசுப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாநில பயிற்சி மையத்தின் சிறப்புப் பணி அலுவலர் சுகுணா சுகிர்த பாய் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் சிவசங்கரி தொகுத்து வழங்கினார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பூர்ணா வரவேற்றார். ஆசிரியர் செல்வகுமார் நோக்கவுரை ஆற்றினார்.பயிற்சி பட்டறையில், டில்லி என்.சி.இ.ஆர்.டி., யில் பணிபுரியும் பேராசிரியர்கள் பிரீத்தம் பியாரி, பீயுஷ் கமல் ஆகியோர் பங்கேற்று, பயிற்சி அளித்தனர். முதல் நாள் பயிற்சியில் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், இரண்டாம் நாள் காரைக்கால், மாகே, ஏனாம் பகுதி தலைமை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.ஆசிரியர் பாரதிராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ