மேலும் செய்திகள்
சாலை சீரமைப்பு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
14-May-2025
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் புதிய மின் மாற்றியை சம்பத் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். முதலியார்பேட்டை தொகுதி நேரு நகர் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும், டோபி கானா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்க, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 600 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.நேற்று, சம்பத் எம்.எல்.ஏ., புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மின்துறை உதவி பொறியாளர் அருணகிரி, இளநிலை பொறியாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
14-May-2025