உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  த.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்

 த.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சுதேசி மில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் புதியவன், முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி மற்றும் நிரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஐ.ஜி., சந்திரன் மற்றும் சசிபாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட 'பெஸ்ட் புதுச்சேரி' என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி அரசு ஏமாற்றிவிட்டது. ​மாநிலம் முழுதும் தடையின்றி விற்பனை செய்யப்படும் போதைப்பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என, கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க.,வின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி